//
you're reading...
Kavithai

பாஸிமா – சிறுகதை

காற்றில் தவழ்ந்து வந்த இன்னிசை ராகத்தை இரசித்தவாறு அந்த மனிதக் கூட்டம் கட்டுண்டு கிடந்த்து. அந்த இசை பூமியில் இருந்து அவர்களை விண்ணுக்கு சுமந்து சென்று கொண்டிருந்த்து.

தொடர்ந்தும் அவள் இசைத்துக் கொண்டே இருந்தாள். இதயத்தின் இழைகளை அது அசைத்துக் கொண்டிருந்த்து.

பின்னர் அவள் இசை மீட்டுவதனை நிறுத்தினாள். தன் இரகசியர்களை திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர். அவளின் ராகங்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பி இருந்த்து.


அவர்களின் சந்தோஷத்தையும் வியப்பையும் வெளிப்படுத்துவதனை அவளின் ராகங்கள் மறக்கடிக்கச் செய்து விட்டன. அவளது இனிய சிரிப்பொலி கேட்டு இரகசியர்கள் எல்லோரும் திடுக்கிட்டனர். அப்போது அந்த இடம் கைதட்டல் ஓசையால் அதிர்ந்த்து.

நானும் அவர்களில் ஒருவனாக இருந்தேன். எனக்கு அவளைப் பற்றி தெரிந்த்தெல்லாம் அவள் எந்நேரமும் சிரித்த முகத்துடனும் இனிமையான புன்முறுவலுடனும் தான் இருப்பவள். அவள் பற்றிய இரகசியம் பரவுகிறது.

உற்சாகத்துடனான சந்தோஷம் அவளைச் சூழ்ந்து கொள்கிறது. தன்னைப் போலவே தனிமைப்பட்ட தன் குழந்தைக்காக இசை மீட்டுவதன் உழைக்கிறாள். நான் அவள் பற்றி தொடர்ந்தும் விசாரித்துக் கொண்டே இருந்தேன். அப்போது தான் அவள் ஒரு தனித்துவமான அரிதான ஆளுமை என்பதனை அறிந்தேன்.

அவளது சிறுவயதிலேயே அவளது பெற்றோர் மரணித்து விட்டனர். ஒன்றன் பின் ஒன்றாக சொந்தங்களை இழந்தவள். கணவனைக் கூட இழந்து விட்டாள். என்றாலும் ஆச்சரியம் இவ்வளவு நடந்தும் கூட எப்போதும் புன்னகை முகத்துடன் தான் அவள் இருந்தாள்.

எப்போதும் நல்லதே நடக்கும் எனும் எண்ணத்தை வார்த்தெடுப்பவளாகவே இருந்தாள். அவளைப் பொறுத்த வரை உலகம் அவளது கண்ணீரை மிகவும் சிறுமையில் போய்விட்ட்து. எனவே, கவலை, துன்பம், கைசேதம் என்பவற்றுக்கு அது வழி வைக்கவில்லை.

இவ்வுலகிலிருந்து எந்த ஒன்றையும் எதிர்ப்பவர்களாக அவள் இருந்த்தனால் அவளது எந்த ஆசையும் தோற்கவுமில்லை.

அவள் அறிந்தவற்றில் தான் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறு எதனையும் அவள் நம்பவுமில்லை.

வாழ்வென்பது மகிழ்ச்சியானது.

அதனது நெருக்கமான முடிவை அறிந்தவர் யாரோ அவர் அதனிலிருந்து அனுபவித்துக் கொண்டே இருப்பாள். சிலவேளை கஷ்ட்த்துக்கு மேல் கஷ்ட்த்தைப் பல தன்மைகளில் கண்டு கொண்டிருக்க முடியும்.

அந்த நாளிலிருந்து நாளும் அவளும் நெருக்கமான நண்பர்களானோம். ஒவ்வொரு நாளும் ஏதேனும் அவள் பற்றிய ஒரு புதுத் தகவலை அறிந்து கொண்டே இருந்தேன்.

நாளாக எங்களுக்குள்ளான புரிதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.இதன் காரணமாக எங்களது அன்பு அதிகரித்த்து. இறுக்கமான பிணைப்பு ஏற்பட்ட்து. அவளது முயற்சிகளில் நான் பங்கெடுத்தேன். பல்வேறு வழிகளிலும் அவளது சம்பாத்தியத்துக்கு பங்களித்துக் கொண்டிருந்தேன்.

இலக்கியம், வரைதல், படிப்பித்தல் என எல்லாத் தளத்திலும் முயற்சிகளையும் செய்தேன்.

அவளுக்காக வேண்டி அனைத்து உழைப்புக்கான கதவினையும் தட்டினேன்.

அவற்றின் தோல்விகளை அவளுக்குத் தெரியாது மறைத்து விட்டேன். அவளைத் தொந்தரவு செய்வதனை நான் விரும்பவில்லை. என்றாலும் அவள் ஒவ்வொரு தோல்வியிருந்தும் மீண்டு கொண்டே இருந்தாள்.


அவள் வெற்றியாளர்களில் முதன்மையானவளாக இருந்தாள்.

அவளது தோல்விகள் தொடரவில்லை. மிக அழகான ஆளர்

ஒரு நாள் அவளது குழந்தை கடுமையாக சுகயீனமடைந்து அதனைக் குணப்படுத்த நான் உதவி செய்தேன்.

எனக்கு எதிரான அது வருமளவுக்கு நான் விழித்திருந்தேன். மிக அடர்ந்த இரவுப் பொழுதில் குளிரான நேரத்தில் அவளைத் தனியாக விட்டு வர சர்ந்தர்ப்பம் என்னை நிர்ப்பந்தித்த்து.

மறு நாள் அவளிடம் சென்ற போது அவளது இரு கண்களும் செந்நிறமாக காட்சி தந்த்து.

ஒரு வரண்ட புன்னகையைத் தான் அவளது உதடுகள் உதிர்த்தன. அதில் வேதனையும் துயரமும் மிகைத்திருந்த்து.

என்ன கொடுமை, இந்த அதிகாலை அநியாயமாக அவளது வசீகரப் புன்னகையை ஏன் பறித்துக் கொண்ட்து?

புன்னகை இதயத்தைத் தாக்கும் சக்தி காலத்திற்கு இல்லையா?

இப்போது தான் நான் அவளது குழந்தையின் இட்த்தைப் பார்த்தேன். எங்கே அவள்? அவளது இட்த்தை ஏன் வெறுமை பீடித்திருக்கிறது?

இறுதியில் அவளது ஒரே குழந்தை அவளோடு பிணைத்திருந்த வாழ்வை விட்டும் பிரிந்து விட்ட்து என்பதனை அறிந்து கொண்டேன்.

எனது கண்களில் மூடிய நீரை தடுக்க முடியாமல் தோற்றுப் போனேன்.

உணர்ச்சிகளே இல்லாதவன் போன்று இருக்க என்னால் முடியுமா?

இல்லை, அவளது அதிகமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.

என்றாலும் அவளது முகத்தைப் பார்க்கின்ற ஒரே பார்வை அவளது கவலைகளை மறைக்க முயற்சிக்கின்ற அவளது துயரமான பார்வையை அறிந்து கொள்ளும்.

அவளைச் சூழ்கின்ற ஒவ்வொரு துன்பமும் அவளது வசீகரப் புன்னகை முகத்தை மறைக்க முடியவில்லை.

ஆனால், அவளது குழந்தையின் மரணம் தலை கீழாய் மாற்றி விட்ட்து.

அவளால் எப்படி அழுகையை நிறுத்த முடியும்?

இப்படியே கவலைக்கும் மகிழ்ச்சிக்குமான போராட்டமாக அவளது வாழ்வு ஒரு மாதகாலமாக நீடித்த்து. அவளது துன்ப்ப் பிடியிலிருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

என்றாலும் அவளது புன்னகைகள் அழுகையைத் தான் கொண்டு வந்தன.

மகிழ்ச்சி மிக்க ஒரு வாழ்வின் பின் அவளது உதடுகள் வேதனையை தான் தந்து கொண்டிருந்தன.

சில நாட்களை அவள் படுக்கையோடு பிணைத்திருந்தாள்.

சோதனைகளின் வேதனைகள் அவளை இம்சிக்கத் தொடங்கின. அவளை அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டு சென்று கொண்டிருந்தேன்

ஒரு நாள் அவளது வீட்டில் ஒருவரையும் காணவில்லை.

பயந்தவனாக அவள் குறித்து பக்கத்தில் விசாரித்தேன். நேற்றிரவே அவள் இந்த உலகுடனான உறவை முறித்துக் கொண்டு விட்டாள் என்பதனை அறிந்தேன்.

அவள் எங்கே? அவள் வாழ்வு முடிந்து விட்ட்து.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று விட்டாள். நாளை அவளது இரட்சகனை புன்னகை முகத்துடன் திருப்தியுடன் நிம்மதியுடனும் சந்திப்பாள்.

ஒரு அமெரிக்க கவிஞனின் கவிதையை முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்து திரும்பினேன்.

Advertisements

About asik5678

Don't care about others be honest

Discussion

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

Pages

My Pledge

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 3 other followers

Advertisements
%d bloggers like this: